Skip to content Skip to sidebar Skip to footer

தற்சார்பு – சித்தர் வழி அகவாழ்வு வகுப்பு

(சுயசார்பு நிலைக்கு வழிவகுக்கும் குறைந்தபட்ச உடலியக்கப் பயிற்சி முறைகள்)

சித்தர்களின் யோகமுறைகள்

நமது உயிர்சக்தி பேரறிவின் ஒவ்வொரு பதிவையும் தன்னுள் உள்ளடக்கியது என்றால், நமக்கான சாத்தியங்கள் எல்லையற்றதென்றால், நாம் ஏன் நோய்வாய்ப்படவேண்டும்..?

நமக்கேன் வலி ஏற்படுகிறது..?

மன அழுத்தம் ஏன் உண்டாகிறது..?

எப்படி அவற்றிலிருத்து விடுபடுவது..!!

பயிற்சியாளர் : திரு.பால்பாண்டியன் அவர்கள்,

திரு.பால்பாண்டியன் அவர்கள் தமிழ்ச் சித்தர்களின் பாதையில் இருபது வருடங்களுக்கு மேல் பயணம் செய்து, தமிழகத்தின் மலைகளிலும், குன்றுகளிலும், மேலும் வெளியுலகுக்குத் தெரியாத, பார்த்திராத தொலைதூர குக்கிராமங்களிலும் வாழும் சித்தர்களிடம் கற்றவர்.அவர், குறித்த காலம் வரை தனது ஆசிரியர்களுடன் வாழ்ந்து, பின்னர் ஒரு வர்ம நிபுணராயும், மருத்துவராயும் தனது சேவையை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாகவே பதினைந்து வருடங்கள் அனைவருக்கும் வழங்கியவர்.

சித்தர்களின் அறிவியலை, வாழ்வியல் முறைகளை இன்றைய சமூகத்தில் இன்னும் ஆழமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தில் திரு.பால்பாண்டியன் அவர்கள் சித்தர் பாரம்பரியத்தின் களரி மற்றும் சித்தர் யோகம் என்னும் இரு பரிமாணங்களையும் இணைத்து, மூன்று நிலைகள் கொண்ட வழிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளார். எளிய குறைந்தபட்ச அசைவுகளின் மூலமாக பங்கேற்பாளர்களை இயற்கையிலேயே நிறைந்துள்ள ஆதார ஆற்றலை அறியச் செய்வதே இப்பயிற்சியின் நோக்கம்.

இயற்கையான குறைந்தபட்ச அசைவுப் பயிற்சிகளால் தேக விழிப்புணர்வுக்கு கொண்டு வரும் முதல் நிலையை இந்த பயிற்சி வகுப்பில் திரு.பால்பாண்டியன் அவர்கள் கற்றுத்தருகிறார். இந்த அடிப்படைப் பயிற்சி, உலகின் இக்கால துரித ஓட்ட வாழ்க்கையில் மிகவும் பொருத்தமானதும் பயனுள்ளதுமாய் இருக்கும். படைப்பாற்றல் மிக்க விழிப்புணர்வு நிறைந்த உடல் மன நலத்துடன் மகிழ்ச்சியான வாழ்வையும் அனுபவிக்க தற்சார்பு பயிற்சிகள் உறுதுணை செய்யும்.

Latest Photos

×